இந்த வலை தளத்திற்க்கு வரும் யாவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்

web stats

Wednesday, March 25, 2015

இன்றைய அரசாங்கத்தின் பார்வையில் தூய்மை இந்தியாவும் அஞ்சல் தலையும்


                       




இன்றைய அரசாங்கத்தின்  பார்வையில் தூய்மை இந்தியாவை  அஞ்சல் தலையின் வாயிலாக   மக்களிடம் பரப்ப ஒரு உக்தியை கையாண்டுள்ளது. இது ஒரு எளிய முறை மட்டுமல்லாமல் சிறுவர்கள்  மத்தியில்  ஒரு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக சிறுவர்களிடமிருந்து போட்டி வாயிலாக தேர்வு செய்யப்பட்ட மூன்று வண்ண ஓவியங்களைப்  பெற்று சிறந்த அச்சு எந்திரங்கள் மூலமாக அச்சடிக்கப்பட்டு அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இந்த வெளியீட்டிற்க்கு  தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் அண்ணல் காந்தி மறைந்த ஜனவரி 30ம் தேதி ஆகும். இந்த அஞ்சல் முகப்புக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அண்ணல் காந்தியின் சிறப்பு சின்னமான காதில் அணியும் கண்ணாடியை முகப்பின் மேல் பதித்து வெளியிட்ட  தேதியுடன் கூடி  சிறப்பிற்கும் வகையில் மேலும் பெருமை சேர்த்துள்ளது.  இந்த அஞ்சல் தலையின் முகப்பை யாவரும் காணும் விதத்தில் மேலே பிரசுரிக்கப்பட்டுள்ளது.

No comments: